செய்திகள்

உயர்தர மற்றும் புலமைப் பரீட்சை வகுப்புகளுக்கு தடை!

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கவுள்ளதால் இன்று (30) நள்ளிரவு முதல் அந்த பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் , மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதனுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் , மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு நாளை (31) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுப் பரீட்சைகளுக்கு 5 நாட்களுக்கு முன்பிருந்து அவற்றுடன் தொடர்புடைய கலந்துரையாடல்களுக்கு தடை விதிக்கும் சட்டத்திற்கமையவே இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. -(3)