உரிய ஒழுங்கு விதிகளை பின்பற்றாத படகுகளின் அனுமதிபத்திரம் இரத்து
படகு போக்குவரத்துக்களின் போது உரிய ஒழுங்கு விதிகளை பின்பற்றாத படகுகளின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு தீர்மானித்துள்ளது.
கட்டுக்குறுந்த கடற்பகுதியில் 11 பேரை பலி கொண்ட படகு விபத்துக் குறித்து கடற்றொழில் நீரியல்வள அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. படகு போக்குவரத்து தொடர்பாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்தப்படாமையே இந்த விபத்திற்கு காரணம் என்று கடற்றொழில் அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
படகில்; பயணித்தவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. கடற் பயணங்களின்போது பின்பற்றபட வேண்டிய செயற்பாடுகள் குறித்து அமைச்சு படகு உரிமையாளர்களுக்கும். அவற்றை செலுத்துபவர்களுக்கும் வழிகாட்டல்களை வழங்கியிருக்கின்றது. அவற்றைக் கருத்தில் கொள்ளாது, பணத்தை இலக்காகக் கொண்டு செயற்படுவதால், இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மனித உயிர்களை மதிக்காது செயற்படும் படகு உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விபத்துக்களை தவிர்க்குமுகமாக எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு கடற்படை, கடலோர காவற்படை ஆகியவற்றின் ஒத்துழைப்பும் பெறப்படும் என்று அமைச்சர் அமரவிர மேலும் தெரிவித்துள்ளார். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. -(3)




