உருத்திரபுரத்தில் தொல்பொருள் நில அளவைப் பணிகள் நிறுத்த
கிளிநொச்சி – உருத்திரபுரத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த நில அளவைப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படவிருந்த நில அளவைகள் தாம் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக நிறுத்தப்படடுளள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட நில அளவைப் பிரச்சினை தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர் முறையிட்டிருந்த நிலையில், அதனை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றதன் விளைவாக நில அளவைப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-(3)




