செய்திகள்

உலகம் இன்னுமொரு போரைத் தாங்காது என்கிறார் ஐ.நா செயலாளர்

மத்திய கிழக்கு பிராந்தியம் போரின் விளிம்பில் நிற்கிறது எனவும் அந்தப் பிராந்திய மக்கள் முழு வீச்சு போரை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளனர் எனவும் ஐ.நா பொது செயலாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பழிக்குப் பழி என இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய வான்வழி தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெறுப்புகளை முன்னெடுக்காமல் போரை நிறுத்துங்கள் என்றும், மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டனியோ குட்ரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் டரோன் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரித்தார்

மேலும், உடனடியாக பதற்றத்தை தணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தல் விடுத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
-(3)