செய்திகள்

உலகில் உயரமான நத்தார் மரத்தை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பம்

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமையுவுள்ள உலகின் உயரமான நத்தார் மர நிர்மாண பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கார்டினல் மல்கம் ரஞ்சித்தின் பணிப்புரைக்கு அமைய குறித்த நத்தார் மரத்தை அமைக்கும் பணிகள் இடைநடுவே கைவிடப்பட்டது.
இதனை அடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கார்டினல் மல்கம் ரஞ்சித்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த நத்தார் மர நிர்மாணம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி நேற்று முதல் அந்த பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. -(3)