உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய்!
குரங்கு அம்மை அல்லது ‘எம்பாக்ஸ்’ (monkeypox) வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் ‘குரங்கு அம்மை’ வைரஸ் தற்போது உலக சுகாதார அபாயத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
எவ்வாறாயினும், ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,664 என்றும் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் நோயைக் குணப்படுத்தும் நோக்கில், பலர் தேவாலயங்களில் பிரார்த்தனைகளில் கலந்துகொண்டனர், இது நோயின் பரவலைத் துரிதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது ‘எம்பாக்ஸ்’ என்ற புதிய வகை திரிபு பரவி வருகிறது. இந்த வகை மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது.
புதிய திரிபு 13 நாடுகளுக்கு பரவியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அந்த நாடுகளில், காங்கோ குடியரசில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை ஒரு தீவிர நோய் அல்ல, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து நோய் விரைவில் குணமடையலாம் அல்லது சிக்கல்கள் ஏற்படலாம்.
நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு இது ஆபத்தானது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களிடம் குரங்கு அம்மை பரவல் அதிகமாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் முதன்முதலில் ஆப்பிரிக்க குரங்குகளின் உடலில் இருந்து 1958 இல் கண்டறியப்பட்டது. அதனால்தான் குரங்கு அம்மை என்று அழைக்கப்படுகிறது.
குரங்குகள் மட்டுமின்றி, எலி, அணில் போன்ற பாலூட்டிகள் மூலமாகவும் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. குரங்கு அம்மை வைரஸ் சின்ன அம்மை வைரஸைப் போன்றது.
இதுவரை ஸ்வீடன், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
குரங்குக் காய்ச்சல் குறித்து இந்திய சுகாதாரத் துறைகளும் கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் இலங்கையும் குரங்கு அம்மை குறித்து மிகவும் விளிப்புடன் இருப்பதாக அறிவித்துள்ளது.
-(3)




