உலக தாய்மொழித் தினம்இன்று………
உலக தாய்மொழித் தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை), உலகலாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது.
‘நடைமுறைக் கல்வி, வழிகாட்டல் மற்றும் கல்வியின் பிரதிபலன்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை தாய்மொழித் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தினை முன்னிட்டு தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சின் கீழ் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சகல மொழிகளினதும் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு என்பதை நோக்காக கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையினால் கடந்த 2007ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய, பெப்ரவரி 21ஆம் திகதி உலக தாய்மொழித் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் வங்காள மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்துமாறு கோரி, கடந்த 1952ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்தே தாய்மொழித் தினம் கொண்டாடப்படுகின்றது.
உலகில் தற்போது 7000இற்கும் அதிகமான மொழிகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன நிலையில், அவற்றில் 50 வீதமான மொழிகள் அழிந்து செல்லும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இவற்றினை அழிவிலிருந்து பாதுகாக்கும் வகையில் உலகலாவிய ரீதியில், இத்தினத்தில் பல விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
N5




