செய்திகள்

உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலுக்கு உறுதி!

உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக மாத்திரமே பொறுப்புக்கூறல் செயல்முறைக்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக விவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இன்றும் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கை குறித்த தமது அறிக்கையை முன்வைத்தார்.

அந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் போது, ​​வௌிவிவகார அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உள்ளக பொறிமுறையில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சர்வதேச விசாரணை பொறிமுறைகள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.