செய்திகள்
உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம் 15ம் திகதியுடன் முடிவு : செயற்பாடுகள் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்படும்
234 உள்ளுராட்சி சபைகளின் ஆயுட் காலம் எதிர்வரும் 15ம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அந்த நிறுவனங்களின் சகல நடவடிக்கைகளையும் அந்தந்த நிறுவனங்களின் செயலாளர்களிடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த சபைகளின் ஆயுட்;காலம்; கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடையவிருந்த நிலையில் அந்த காலம் மேலும் ஒன்றரை மாதங்களால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன்படி அவற்றின் ஆயுற்காலம் எதிர்வரும் 15ம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
15ம் இவற்றில் 3 மாநகர நகர சபைகள் , 30 நகரசபைகள் , 201 பிரதேச சபைகள் உள்ளடங்குகின்றன. என்பது குறிப்பிடத்தக்கது




