செய்திகள்

உள்ளுராட்சி தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு?

உள்ளுராட்சி தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என அரசாங்க தரப்பு தகவல்களை ஆதரம் காட்டி தகவல்கள் வெளியாகின்றன.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசியலமைப்பு நிர்ணயசபையில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதுடன் இதன்படி புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி மார்ச் மாதமளவில் சர்வஜன வாக்கெடுப்புக்கான தேர்தல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)