செய்திகள்

உள்ளுராட்சி தேர்தல் மேலும் 6 மாத காலம் ஒத்தி வைக்கபட்டது?

உள்ளுராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய பணிகள் தொடர்பான குழுவுக்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய பணிகளின் போது பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் இதன்படி அவற்றுக்கு தீர்வு காண மேலும் கால அவகாசத்தை வழங்குமாறு அந்த குழுவினர் கோரியிருந்ததாகவும் இதன்படி அவர்களுக்கு கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எல்லை நிர்ணய பணிகள் முடிந்த பின்னர் உடனடியாக தேர்தலை நடத்த நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் அமைச்சர்  தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
n10