செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் – வாக்களிப்பு வீதத்தில் வீழ்ச்சி!

நாடு பூராகவுமுள்ள 339 உள்ளூராட்சி சபைகளுக்குமான 8287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு பூராகவும் 13,759 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற்றது.

இதில் 25 மாவட்டங்களிலும் 4879 வட்டாரங்களில் ஒரு கோடியே 71 இலட்சத்து 56 ஆயிரத்து 338 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

4 மணியுடன் வாக்களிப்புகள் நிறைவடைந்துள்ளது.
இதன்படி இம்முறை வாக்களிப்பில் 65 வீதம் வரையிலான வாக்குப் பதிவுகளே இடம்பெறுள்ளன. இது கடந்த தேர்தல்களை விடவும் குறைந்தளவாக வாக்குப் பதிவு வீதமாகும்.

மன்னார் மாவட்டத்திலேயே அதிகளவான வாக்கு வீதம் பதிவாகியுள்ளது. அந்த மாவட்டத்தில் 70 வீத வாக்குகள் பதிவாகியுள்ளளன. அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 50 வீதமும் திருகோணமலை மாவட்டத்தில் 67 வீதமும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 56.6 வீதமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 66 வீதமும், பொலனறுவை மாவட்டத்தில் 53 வீதமும், அநுராதபுரம் மாவட்டத்தில் 64 வீதமும், காலி மாவட்டத்தில் 63 வீதமும், அம்பாறை மாவட்டத்தில் 63 வீதமும், மொனராகலை மாவட்டத்தில் 61 வீதமும், வவுனியா மாவட்டத்தில் 61 வீதமும், பதுளை மாவட்டத்தில் 60 வீதமும், மாத்தறை மாவட்டத்தில் 58 வீதமும், நுவரெலியா மாவட்டத்தில் 60 வீதமும், புத்தளம் மாவட்டத்தில் 55 வீதமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 வீதமும், கேகாலை மாவட்டத்தில் 58 வீதமும், இரத்தினபுரி மாவட்டத்தில் 60 வீதமும், வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.