உள்ளூராட்சி தேர்தலில் ஐதேக – பொதுஜன பெரமுன கூட்டணியாக போட்டி!
ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளன.
சில மாவட்டங்களில் யானை சின்னத்திலும், சில மாவட்டங்களில் மொட்டு சின்னத்திலும் போட்டியிடுவதற்கு இரண்டு கட்சிகளும் இணக்கம் கண்டுள்ளன.
கொழும்பில் இன்று நடைபெற்ற இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கட்சிகளின் மாவட்ட தலைவர்களை கொழும்புக்கு அழைத்து இது தொடர்பில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள இரண்டு கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




