உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது!
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் மார்ச் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இன்று முற்பகல் கூடி இது தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளது.
தேர்தலுக்கான நிதியை அரசாங்கம் வழங்காமையினால் அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
-(3)




