ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டமூலமொன்றை கொண்டு வர அரசாங்கம் திட்டம்?
ஊடகங்கள் தொடர்பாக புதிய சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் மகிந்த சமரசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.
எந்தவொரு செய்தியை வெளியிடும் போதும் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். இருக்கும் சுதந்திரந்திரத்தை ஊடகங்கள் சரிவர பயன்படுத்த வேண்டும். எவ்வாறாயினும் ஊடகங்கள் தொடர்பாக புதிய சட்டமூலமொன்று கொண்டு வரப்படவுள்ளது. அது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடக்கின்றன. என அவர் தெரிவித்துள்ளார்.
R-06




