செய்திகள்

ஊடகங்கள் தமது பொறுப்புகளை சரிவர உணர வேண்டும் : ஜனாதிபதி

ஊடகங்கள் அரசாங்கத்தை கவிழ்த்தல் , அரசாங்கத்தை அவதூறு செய்தல் மற்றும் அதிகாரத்தை குறைத்தல் ஆகிய குறுகிய நோக்கங்களில் செயற்படாது நாட்டை கட்டியெழுப்பும் சிந்தனையிலிருந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் இல் இடம்பெற்ற விஞ்ஞான ஆய்வுகளுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டுக்கான ஊடகத்தின் பொறுப்பு பரந்ததெனவும் குறிப்பிட்டதோடு, அரசாங்கத்தை கவிழ்த்தல், இருக்கும் அரசாங்கத்தை அவதூறு செய்தல், அரசியல்வாதிகளின் அதிகாரத்தை குறைத்தல் போன்ற குறுகிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டு நாட்டைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்லக்கூடிய சிறந்த செய்தியை நாட்டுக்கு வழங்க வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். -(3)