செய்திகள்

ஊடகவியலாளர்களின் ஆகக் குறைந்த சம்பளத்தை நிர்ணயம் செய்ய அரசாங்கம் யோசனை

ஊடகவியலாளர்களின் ஆகக் குறைந்த சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் ஊடகத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி இது தொடர்பாக சட்டமூலமொன்றை கொண்டுவரவுள்ளதாகவும் இதன்போது இந்தியாவின் முறைமை பின்பற்றப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)