ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது கடற்படை தளபதி உள்ளிட்டோரால் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று வியாழக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர்களினால் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துக்கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது. -(3)




