ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் திருத்தம்: பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தாமதம்!
ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் உத்தரவுக்கமைய குறித்த சட்டமூலம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 2023 ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம் திருத்தப்படவுள்ளது.
இந்த சட்டத்தில் சில சரத்துக்களின் பிழைகள் காரணமாக, இலஞ்சம், ஊழல் விசாரணைக்காக புதிய ஆணைக்குழுவை அமைப்பது உள்ளிட்ட பல விடயங்களுக்கு தடை ஏற்பட்டன.
இந்நிலையில் இந்த சட்டமூலம் அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என நம்பப்படுவதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது மேலும் தாமதமாகும் என விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை வருட வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் அந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவிக்கின்றார்.
-(3)




