செய்திகள்

எங்கேனும் சூழல் பாதிப்பு ஏற்பட்டால் அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை : ஜனாதிபதி

நாட்டில் ஏதேனும் பிரதேசத்தில் ஆறுகள் மற்றும் நீரோடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்படும் சட்ட விரோத நிர்மானங்கள் தொடர்பாக அந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான அரச அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமது பொறுப்புகளை சரிவர செய்யும் அரச அதிகாரிகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எந்தளவு கடமைப்பட்டுள்ளதோ அதேபோன்று  தமது கடமைகளை சரிவர செய்யாத அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கையெடுப்பதற்கும் அரசாங்கம் தயங்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜுன் 5ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச சுற்றாடல் தினத்திற்கு சமாந்திரமாக நேற்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை தேசிய சுற்றாடல் வாரத்தை பிரகடணப்படுத்தும் வகையில் பொலனறுவை சேவாமுக்த மகாவித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குஇ மண்சரிவு போன்ற நிலைமைகளை எதிர்கொள்ள நேர்ந்த அபாக்கிய நிலைமைகள் தொடர்பாக நாம் மழை வீழ்ச்சியை சபிக்காது சூழலை நாசம் செய்த நபர்களையே சபிக்க வேண்டுமென ஜனாதிபதி  அவர்கள் இதன்போது தெரிவித்துள்ளார்.
களணி கங்கை பாதுகாப்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட ரீதியற்ற கட்டிட நிர்மாணங்கள் மற்றும் நீர் வழிந்தோடும் மார்க்கங்களில் கட்டிடங்கள் அமைத்தல் என்பன காரணமாக மக்கள் பல நாட்களாக வெள்ளத்தினால் துன்பப்பட நேர்ந்ததனை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள்இ இதற்கு இடமளித்த அரசியல்வாதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களே இவற்றிற்கு பொறுப்புக்கூற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
n10