எட்கா ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்க தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை : ஐ.ம.சு.கூ செயலாளர்
இலங்கை – இந்தியாவுக்கு பொருளாதாரம் தொழிநுட்ப உறவுகள் தொடர்பான எட்கா ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பதற்கு இன்னும் தீர்மானிக்கவில்லையென அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று அகுனுபெலஸ்ஸ பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வருடத்திற்குள் எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)




