செய்திகள்

எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் – கப்பல் சர்வதேச கடல் பரப்பில்

இலங்கைக்கு கிழக்கே கடலில் எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது அந்தக் கப்பல் பாதுகாப்பாக சர்வதேச கடல் பரப்புக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அம்பாறையிலிருந்து 35 கடல் மைல் தொலைவுக்கு அந்தக் கப்பல் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர், விமானப் படையினர் மற்றும் கடலோரக் காவல்படையினரின் இரண்டு நாள் போராட்டத்தின் பலனாக எம்டி நியு டயமன்ட் (MT New Diamond) கப்பலில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆனால் கப்பலில் தொடர்ந்தும் புகை வருவதாகவும் இதனால் இது தொடர்பாக அவதானமாக இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு எதுவும் ஏற்படவில்லையெனவும் கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். -(3)