செய்திகள்
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மன்னார் ஆயர் இல்லத்திற்கு திடீர் விஜயம்
மன்னாரிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும்,எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இன்று காலை மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும்,எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களுடன் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களும் சென்றிருந்தார்.
முதலில் ஆயர் இல்லத்திற்குச் சென்ற எதிர் கட்சித்தலைவர் உள்ளிட்ட குழுவினர் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை அவர்களை சந்தித்து உரையாடிதோடு ஆசிபெற்றனர்.
பின்னர் ஓய்வு பெற்ற முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
-இதன் போது திருகோணமலை மறை மாவட்ட ஆயர் றோயல் இம்மானுவேல்,ஆயரின் செயலாளர் அருட்தந்தை முரளிதரன்,மன்னார் மாவட்ட பொது அமைப்புககளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
N5











