செய்திகள்

எதுக்கு நான் கைதாக வேண்டும்- தாணு தெளிவான விளக்கம்

தெறி, கபாலி என இரண்டு மெகா ஹிட் படங்களை தயாரித்தவர் தாணு. இவர் நாகர்கோவிலில் பிரபல திரையரங்க உரிமையாளருக்கு ரூ 2 லட்சம் தர வேண்டும், அதை தராததால் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

பின் அவர் கைது செய்யப்படுகிறார் எனவும் கூறப்பட்டது, ஆனால், இதுக்குறித்து தாணு கூறுகையில் ‘இது ஒரு பொய்யான வழக்கும்.

நான் தயாரித்த திருமகன் (2007) படத்தை வாங்கி திரையிட்டவருக்கும் இந்த தியேட்டர் உரிமையாளருக்கும் இடையிலான பிரச்சினையில், தேவையில்லாமல் என் பெயரை இழுத்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த தியேட்டர் உரிமையாளரிடம் நான் ஒரு பைசா கூட வாங்கவில்லை.

அவரிடம் ரூ 2 லட்சம் வாங்கும் நிலையிலா நான் இருக்கிறேன்’ என கோபமாக விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், வேண்டுமென்றே தாணுவின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் தான் இதை செய்கிறார்கள் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது.,

N5