செய்திகள்

எந்தவொரு நாடும் இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்கவில்லை! அரசின் வேலைத்திட்டமே காரணம்: சஜித் பிரேமதாஸ சொல்கிறார்

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டத்தின் கார­ண­மாக இந்­தி­யாவோ, அமெ­ரிக்­காவோ , பிரித்­தா­னி­யாவோ எந்­த­வொரு அழுத்­தத்­தையும் இனிமேல் இலங்­கைக்கு எதி­ராக முன்­னெ­டுக்­காது. எங்­க­ளது செயற்­பா­டுகள் மீது சர்­வ­தேசம் அதீத நம்­பிக்கை கொண்­டுள்­ளது என்று வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

உள்­ளக விசா­ர­ணைகள் தொடர்பில் இலங்கை மக்­களின் தீர்­மா­னத்தின் பிர­கா­ரமே நட­வ­டிக்­கைகள் முன்னெ­டுக்­கப்­பட வேண்டும் என்ற மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைனின் கூற்­றினால் நாடு எவ்­வாறு பிளவு படும் எனவும் வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ கேள்­வி­யெழுப்­பினார்.

அநு­ரா­த­பு­ரத்தில் வீட்டு கடன் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன் தினம் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டில் நீண்­ட­கா­ல­மாக நிலை­கொண்­டி­ருந்த யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்த போதிலும் சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் நாம் வெற்­றிக்­கொள்­ள­வில்லை. தற்­போது புதிய பயங்­க­ர­வா­தத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான விதைகள் நடப்­பட்டு வரு­கின்­றன. எனினும் தற்­போது அவை­ய­னைத்தும் முடக்­கப்­பட்டு இன­வாதம் முழு­மை­யாக தோற்­க­டிக்­கப்­பட்டு விட்­டது.

நாட்டில் பள்­ளி­வாசல் , கோயில்கள் , கிறிஸ்­தவ தேவஸ்­தா­னங்கள் மற்றும் விகா­ரை­களின் ஊடாக இன­வாதம் தூண்­டப்­பட்ட காலத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டை இரண்­டாக பிள­வு­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்கள் மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக எதி­ர­ணி­யி­னர்­குற்றம் சாட்­டு­கின்­றனர். இதற்­கா­கவே மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்த அல் ஹுசைன் இலங்கை வருகை தந்­த­தாக எதி­ர­ணி­யினர் கோஷ­மிட்ட வண்­ண­முள்­ளனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிற­சே­னவோ பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ இரா­ணுவ வீரர்­களை எக்­கா­ரணம் கொண்டும் சர்­வ­தே­சத்தின் முன்­னி­லையில் மண்­டி­யிட செய்­யப்­போ­வ­தில்லை. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டத்­தினால் சர்­வ­தேசம் எமது அர­சாங்­கத்­திற்கு எதி­ராக எந்­த­வொரு அழுத்­தமும் பிர­யோகிக்க மாட்­டாது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டத்தின் கார­ண­மாக இந்­தி­யாவோ, அமெ­ரிக்­காவோ , பிரித்­தா­னி­யாவோ எந்­த­வொரு அழுத்­த­த்தையும் இனிமேல் இலங்­கைக்கு எதி­ராக முன்­னெ­டுக்­காது.

இதே­வேளை உள்­ளக விசா­ர­ணைகள் தொடர்பில் இலங்கை மக்­களின் தீர்­மா­னத்தின் பிர­கா­ரமே நட­வ­டிக்­கைகள் முன்­னே­டுக்­கப்­பட வேண்டும் என்று மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் தெரி­வித்­துள்ளார். அவ்­வா­றாயின் ஹுசைனின் வரு­கை­யினால் நாடு எவ்­வாறு பிள­வு­படும். மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் வருகை எமக்கு சாத­க­மாக முடிவடைந்துள்ளது. ஆகவே இது தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

நல்லாட்சியின் போது மாளிகை நிர்மாணிப்பதற்கு முக்கியத்துவம் அளித்து செயற்படப்போவதில்லை. அதற்கு எதிர் மாறாக வீடு இல்லாத இலட்ச கணக்கான மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கே அதிகளவில் முக்கியத்துவம் செலுத்தப்படும் என்றார்.
R-06