செய்திகள்
எனக்கு சூழ்ச்சி செய்தவர்கள் இப்போ மைத்திரியிடம்; கொரியாவில் மகிந்த
சூழ்ச்சிக்காரர்களுடனேயே தான் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளேன் என்பதனை தற்போது புரிந்துக்கொண்டுள்ளதாகவும் அதே சூழ்ச்சிக்காரர்கள் தற்போது மைத்திரியிடம் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவு பயணம் மேற்கொண்டுள்ள அவர் அங்கு இலங்கை மக்களுடன் சந்திப்பை நடத்திய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அன்று நான் ஜனாதிபதியாக இருந்த போது என்னிடம் வந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முண்டியத்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது தற்போதைய ஜனாதிபதியிடம் அதேபோன்று செல்கிறார்கள். இவ்வாறான சூழ்ச்சிக்காரர்களுடனேயே நான் பதவியில் இருந்துள்ளேன். இப்போ இதனை புரிந்துக்கொண்டுள்ளேன். என அவர் தெரிவித்துள்ளார்.




