எனது அந்த பலவீனத்தை பயன்படுத்தி காரியம் சாதிப்பார் மீனாட்சி – சரவணன்
சினிமாவைப்போலவே சின்னத்திரைக்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில் சின்னத்திரையில் தனி முத்திரை பதித்த சீரியல் சரவணன் மீனாட்சி. இத்தொடரின் முதல் பாகத்தின் ஜோடியான செந்தில்-ஸ்ரீஜா நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தனர்.
இந்த ஜோடி மீண்டும் ஒரு சீரியலில் நடிக்கவுள்ளனர். இவர்கள் சமீபத்தில் அரவிந்த்சாமியின் கேம்ஷோவில் கலந்து கொண்டனர். இதில் செந்தில் பேசுகையில் முதல்வன் பட வடிவேலுக்கு இடுப்பில் இருக்கும் பலவீனத்தை போலவே எனக்கு கழுத்தில் உள்ளது.
என்னிடம் ஏதாவது கோபம் என்றால் இதை தான் எனது மனைவி ஸ்ரீஜா பயன்படுத்துவார் என கலகலப்பாக கூறியுள்ளார்.
N5




