செய்திகள்

எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது : மகிந்த குற்றச்சாட்டு

தனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தெரியவருகின்றது. அதேபோல் எனது தொலைபேசியும் ஒட்க்கேட்கப்படுகின்றது. என்னுடன் கதைத்த அமைச்சர்களிடம் அது தொடர்பாக விசாரிக்கப்படுகின்றன். இப்படி அரசாங்கம் நடந்துக்கொண்டால் எவ்வாறு ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியும். என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற அவன்கார்ட் தொடர்பான வழக்கு விசாரணையை அவதானிக்க சென்றிருந்த போது ஊடகவியலாளர்களிடமே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)