செய்திகள்

எனது படங்களுடன் கூடிய பதாதைகளை உடனடியாக அகற்றுங்கள் : பிரதமர் செயலாளருக்கு உத்தரவு

வீதிகளில் காணப்படும் தனது படங்களுடன் கூடிய  சகல பதாதைகளையும் உடனடியாக அகற்றுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக நாட்டில் பல பாகங்களில் வீதியோரங்களில் பல்வேறு பிரசார பதாதைகள் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே பிரதமர் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக வீதிகளில் காணப்படும் தனது படங்களுடன் கூடிய மற்றும் மற்றைய பதாதைகளை தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய முன்னர் அகற்றிவிட வேண்டுமென பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.