செய்திகள்

எனது பிள்ளைகள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : சந்திரிகா

எனது பிள்ளைகள் அரசியலுக்கு வரமாட்டார்கள் என உறுதியாக கூறிக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தான் அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்கப் போவதில்லை. எந்த தேர்தலிலும் போட்டியிடவும் மாட்டேன். எனக்கு அப்படி ஆசையும் கிடையாது. அதேபோல் எனது பிள்ளைகளும் அரசியலுக்கு வர மாட்டார்கள். அவர்களுக்கும் அரசியலுக்கு வர ஆசை கிடையாது. என அவர் தெரிவித்துள்ளார்.
n10