செய்திகள்

என்னுடன் இருக்கும் அனைவரும் இவ்வாறு தாக்கப்படுவார்கள்: மகிந்த ராஜபக்‌ஷ ஆதங்கம்

“என்னுடன் இருக்கும் அனைவரும் இவ்வாறு தாக்கப்படுவார்கள் அல்லது சிறைக்குச் செல்ல நேரிடும் அல்லது FCIDக்கு விசாரணைக்காகச் செல்ல நேரிடும்” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கின்றார்.

மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத் குமாரவின் தலவத்துகொட வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று அங்கு சென்றிருந்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட சிலரும் முன்னாள் ஜனாதிபதியுடன் சென்றிருந்தனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாவது,

“என்னுடன் இருக்கும் அனைவரும் இவ்வாறு தாக்கப்படுவார்கள் அல்லது சிறைக்குச் செல்ல நேரிடும் அல்லது FCIDக்கு செல்ல நேரிடும். இதுவே நடைமுறை என நான் எண்ணுகின்றேன்.

தற்போது ஊடகங்களையும் தூற்றுகின்றனர். ஊடகங்கள் மஹிந்த ராஜபக்ஸவுடையது என்பது எமக்குத் தெரியும் என கூறுகின்றனர். எனினும், தூற்றும் போது ஊடகம் மௌனிக்கின்றது.

எனக்கு அவ்வாறே புலப்படுகின்றது. ஊடகங்களையும் உரிமையாளர்களையும் மௌனிக்கச் செய்ய முடியும். எனினும், ஊடகவியலாளர்களை மௌனிக்கச் செய்வது கடினமாகும்.

R-06