செய்திகள்

என்னுடைய ஓடாத படங்கள் தான் சிறந்த படங்கள் – மிஷ்கின்

தமிழ் சினிமாவில் மிக வித்தியாசமான அதே சமயம் விவகாரமான இயக்குனர் என்றால் மிஷ்கின் தான். இவரது படங்களுக்கு சினிமா ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்,

இந்நிலையில் ஒரு படத்தின் டிரைலரை பார்த்தே அந்த படத்தின் வெற்றியை கணிக்க முடியாது. நான் ‘முகமூடி’ படத்தை எடுத்து முடித்து டிரைலரை பார்க்கும்போது, அந்த படம் பெரிய அளவில் ஹிட் ஆகும், நான் ஹாலிவுட் வரை செல்வேன் என்றெல்லாம் நினைத்திருந்தேன். ஆனால், அந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.

அதேபோல், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை எடுத்து மூன்றரை கோடி ரூபாய் எனக்கு நஷ்டம் ஏற்பட்டபிறகு, என்னால் 40 நாட்கள் வெளியே வரவே முடியவில்லை.

ஆனால், அதற்காக என்னுடைய தன்னம்பிக்கையை கைவிடவில்லை என்னுடைய மிகச்சிறந்த படங்களே என்னுடைய ஓடாத படங்கள்தான். அது, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும். படம் எடுக்க வருகிறவர்கள் ரொம்பவும் தெளிவாக இருக்கவேண்டும். 100 ரூபாய் போட்டால் 400 ரூபாய் கிடைக்கும் என்பதற்கு இது சூதாட்ட கிளப் இல்லை. கயிறு மேல் நடப்பதுபோல்தான் சினிமா.

கீழே விழுந்தால் மரணம்தான். ஆனால், இந்த மரணத்தில் நிறைய பேர் கைபிடிக்க வருவார்கள். ஆகையால், வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து செல்லக்கூடாது. என்று கூறியுள்ளார்.

N5