என்னை எதிர்த்த ரணில் தவறை திருந்திக்கொண்டார் : சந்திரிகா
ஜனாதிபதியாக தான் பதவி வகித்த காலத்தில் தன்னால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்த யோசனையையே தற்போதைய அரசாங்கமும் முன்வைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அன்று தனது யோசனையை எதிர்த்த ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியினர் தற்போது தமது தவறுகளை ஏற்றுக்கொண்டு அந்த யோசனைகளை செயற்படுத்துவதற்கு முன்வந்துள்ளதாகவும் இதனை தான் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”இதுவே மனித குணம். அன்று வேண்டாமென கூறிய அரசியலமைப்பு யோசனையையே இப்போது ரணில் விக்கிரமசிங்க கொண்டுவரவுள்ளார். அன்று நான் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்துவிடுவேன் என்ற பயந்தனர். ஆனால் இப்போ அவர்களை ஆட்சிக்கு கொண்டு வரவும் , அவர்களை தலைமைப் பதவிக்கு நியமிக்கவும் மற்றும் பிரதமர் பதவியையும் பெற்றுக்கொடுக்கவும் மற்றுவொருரை ஜனாதிபதியாக்கவும் நான் உதவியுள்ளேன். இதன்படி அன்று நான் கூறியதை இப்போ இவர்கள் கூறுகிறார்கள். என தெரிவித்துள்ளார். -(3)




