செய்திகள்

என் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவரை விடுதலை செய்யுங்கள்

தன் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த உதவியவர் என்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி்களின் செயற்பாட்டாளரை விடுவிக்குமாறு அமைச்சர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று காலை நடத்திய   செய்தியாளர் சந்திப்பிலேயே, சரத் பொன்சேகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

”தன்னைக் கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்திருந்தார்.

அதுபோலவே இராணுவத் தலைமையக குண்டுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மொறிஸ் என்ற விடுதலைப் புலி உறுப்பினரையும் விடுதலை செய்ய வேண்டும்.

நான் சிறைச்சாலையில் இருந்த போது அவரை சந்தித்துள்ளேன். அவரை விடுவிப்பது நல்லிணக்கத்துக்கான ஒரு சமிக்ஞையாக இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

n10