செய்திகள்

எமது பேரணியில் கலந்துகொண்ட எம்.பி.க்களை வெளியேற்ற அரசு அஞ்சுகிறது: மகிந்த சொல்கிறார்

பொது எதிரணி கடந்த வாரம் நடத்திய பேரணியில் கலந்துகொண்ட ஶ்ரீல.சு.க. எம்.பி.க்கள் கட்சியிலிருந்து எந்தவொரு சூழ்நிலையிலும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக் கருத்து வெளியிட்டிருக்கும் மகிந்த ராஜபக்‌ஷ, அவ்வாறு அவர்கள் வெளியேற்றப்பட்டால் புதிய கட்சி ஒன்று உடனடியாகவே அமைக்கப்பட்டுவிடும் என அரசாங்கம் அச்சமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத் தரப்பினர் தம்மீது தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்திவருவது தம்மை மேலும் பலப்படுத்துவதாகவுள்ளது எனவும் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொது எதிரணி நடத்திய பேரணியில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 40 எம்.பி.க்கள் கலந்துகொண்டிருந்தார்கள் என்பது தெரிந்ததே.
R-06