‘எமது வாசம் உதவும் உறவுகள்’ அமைப்பின் இணையத்தளம்
எமது வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் சேவையை மேலும் விரிவுபடுத்தவும், மக்களுக்கு தெரியப்படுத்தவும், http://vaasam.org/ என்ற இணைய முகவரியில் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் அண்மையில் லண்டனில் திறந்து வைக்கப்பட்டது.
இன் நிகழ்விற்க்கு பிரதம விருந்தினராக இலண்டன் ஈஸ்ட்காம் கவுன்சிலரும் துணை மேயரும் சமூக சேவகருமான திரு போல் சத்தியநேசன் கலந்துகொண்டதோடு மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.
சட்ட ஆலோசகரும் சமூக சேவகருமான இராகவன் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். திரு. நந்தன், திரு. பாலன் மற்றும் அமைப்பின் ஆலோசகரும் லண்டன் இணைப்பாளருமான திரு:ரவிக்குமார் ஆகியோர் உரையாற்றினார்கள். திரு .திருக்குமார் நன்றியுரை வழங்கினார்.






