செய்திகள்

எம்பிலிப்பிட்டிய கொலைக் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது

எம்பிலிப்பிட்டிய செவனகல பகுதியில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்வமொன்று தொடர்பாக குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2008 பெப்ரவரி 27ஆம் திகதி 32 வயதுடைய ஒருவரை கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்து.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீண்ட காலமாக இடம்பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் அவர்கள் மூவரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக 32 , 36 மற்றும் 29 வயதுடைய மூவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
n10