செய்திகள்

எம்.எஸ். சுப்புலட்சுமியை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமானுக்கு கிடைத்த கௌரவம்

இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல இடங்களில் நிறைய நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ஐ.நா சபையிலும் சுதந்திர தின ஸ்பெஷல் கொண்டாட்டம் நடக்க இருக்கிறதாம்.

இந்த விழாவில் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இசை நிகழ்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியரான ஏ.ஆர். ரகுமான் நடத்துகிறாராம். இதற்கு முன்பு 1966–ம் ஆண்டு பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.

N5