செய்திகள்
எம்.ஜி. ஆர் சமாதிக்கு அருகில் புதைக்கப்படவுள்ள ஜெயலலிதாவின் பூதவுடல்: மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார்
இன்னமும் சில மணி நேரங்களில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பூதவுடல் சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ஆர் சமாதிக்கு அருகில் புதைக்கப்படவுள்ளது.
ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்ட அவரது பூதவுடலுக்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் பல மாநிலங்களின் முதலமைச்சர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான தமிழக மக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.





