செய்திகள்

எரிபொருள் கடைகள் மூன்றின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை மற்றும் இராணிவத்தை பிரதேச நகர் பகுதிகளை இன்று காலை 10 மணியளவில் திடீர் சோதனைக்குட்படுத்திய லிந்துலை பொலிஸார் அனுமதியின்றி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட எரிபொருள் கடைகள் மூன்றின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 இவர்களில் இருவர் நாகசேனை கடை வீதியை சேர்ந்தவர்களும் ஒருவர் இராணிவத்தை கடை தொகுதியை சேர்ந்தவராகவும் அடங்குவர்.

 இவர்களை எதிர்வரும் 23 அல்லது 24 ஆம் திகதிகளில் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்திற்கு ஆஜராகும் படி பொலிஸ் அழைப்பாணை வழங்கப்பட்டு விடுதலை செய்யதுள்ளனர்.

 லிந்துலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த சோதனையை மேற்கொண்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

n10