எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சரின் அறிவித்தல்!
எரிபொருளுக்கான கொள்வனவு கட்டளைகளைப் பிறப்பிக்காமல் இருக்கும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட எரிபொருள் இருப்பை உறுதி செய்யாத எரிபொருள் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், 92 ஒக்டேன் பெற்றோல் இருப்பை பேணாத 51 எரிபொருள் நிரப்பு நிலையங்களும், ஒட்டோ டீசல் இருப்பைப் பேணாத 101 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனதான அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, அவற்றுடன் தொடர்புடைய எரிபொருள் நிலையங்களுக்கு உடனடியாக தங்களுக்கான எரிபொருள் கொள்வனவு கட்டளைகளைப் பிறப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.
எரிபொருள் விலை மாறும் என்பதால் இலாபம் கருதி எரிபொருள் வர்த்தகர்கள் இவ்வாறு இருப்பை பேணாததன் விளைவாக, மீண்டும் எரிபொருளுக்கான வரிசைகள், விலைமாற்றம் நிகழும் தினங்களில் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-(3)




