எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
டீசல் மற்றும் மண்ணெண்ணெயின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள.
ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு லீற்றர் டீசலின் புதிய விலை 430 ரூபாவாகும்
மண்ணெண்ணையின் விலை 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் புதிய விலை 365 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை அதிகரிப்பிற்கு அமைவாக லங்கா IOC யின் விலைகளும் அதிகரிக்கும் என லங்கா ஐ ஓ சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
-(3)




