செய்திகள்
எரிவாயு விலைகள் நள்ளிரவு முதல் குறைப்பு!
சமையல் எரிவாயு விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் குறைக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி 12.5 கிலோ நிறையுடைய சிலிண்டர் ஒன்றின் விலை 113 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன் புதிய விலை 4551ரூபாவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5 கிலோ சிலிண்டரின் விலை 45 ரூபாவினாலும், 2.5 கிலோ சிலிண்டரின் வவிலை 21 ரூபாவினாலும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-(3)




