செய்திகள்

எரிவாயு விலைகள் மீண்டும் உயர்வு!

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 334 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 134 ரூபாவாலும் மற்றும் 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 61 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்தார்.

அதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,743 ரூபாய் ஆகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1904 ரூபாய் ஆகவும் மற்றும் 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 883 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

-(3)