செய்திகள்

எலிசபெத் மகாராணிக்கு இன்று 90 ஆவது பிறந்த நாள்: அவர் பற்றிய சில முக்கிய தகவல்களும் படங்களும்

பிரித்தானிய மாகாராணி 2ம் எலிசபெத் தனது 90வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றார்.

இவர் 21 ம் திகதி ஏப்ரல் மாதம் 1926 ம் ஆண்டு லண்டனில் பிறந்தார். இவர் பிறக்கும் பொழுது பிரித்தானிய முடிக்குரிய அரசுரிமையில் பங்குபற்றுவதற்கான வாய்பேதுமில்லாதிருந்தது. ஏனெனில் அப்பொழுது மகராணியாரின் தந்தையாரது தகப்பனாரான 5ம் ஜார்ஜ் மன்னர் ஆட்சியிலிருந்தார். அவருக்குப் பின்னர் அரசுரிமை எலிசபெத்தின் பெரியப்பாவான 8ம் எட்வர்ட் மன்னருக்கு 1936ல் சென்றது. 8ம் எட்வர்ட் மன்னர் விதவையான வில்லிஸ் சிம்சனை திருமணம் செய்தமையால் அவருக்கு பிரித்தானிய அரசியல் அமைப்பின் பிரகாரம் உரிமையில்லாது போக மாகாராணியின் தந்தை 6ம் ஜார்ஜ் மன்னருக்குச் சென்றது. அவர் ஆட்சியில் இருக்கும் பொழுது நோய்வாய்ப்பட்டு இறக்க  06 பிப்ரவரி 1952 ம் ஆண்டிலிருந்து அரசுரிமையைப் பெற்றுக்கொண்டார். 02 ஜூன் 1953ல் இருந்து அன்றைய பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரசியாக முடிசூடிக் கொண்டார் .

ஐக் கிய இராச்சியம், கனடா, அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா உட்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாகவும் 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பொதுநலவாயத்தின் தலைவரும் இவராவார்.

இவருக்கு இளவரசர் சார்ல்ஸ், இளவரசி ஆன் இளவரசர் பிலிப்ஸ் இளவரசர் அன்ரு எனும் நான்கு பிள்ளைகளும் 8 பேரப்பிள்ளைகளும் 5 பூட்டப் பிள்ளைகளும் உள்ளனர் . இவருக்குப் பின்னர் அரசுரிமை தற்போது வேல்ஸ் இளவரசராக உள்ள சார்ல்ஸ்சுக்கும், சார்ல்ஸ் பின்னர் அவரது மகனான தற்பொழுது கேம்பிறியின் கோமகனாக உள்ள இளவரசர் வில்லியத்துக்கும் , வில்லியத்தின் பின்னர் அவரது மகனும் மாகாராணியான் பூட்டப்பிள்ளையுமான இளவரசர் ஜார்ஜ்கும் செல்லும்.

மகராணி பற்றிய சில முக்கிய தகவல்கள்:

· பிரித்தானிய மாகராணி கடவுச்சீட்டின்றி உலக நாடெங்கும் பயணிக்க முடியும்
· இவருடைய ஆட்சியில் இதுவரையும் 12 பிரதமர்களை கண்டுள்ளார்
· பிரித்தானிய வரலாற்றில் நீண்டகாலம் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பெருமை இவரைச்சாரும்.
.இவருக்கு முன்னர் விக்டோரிய மகாராணியார் நீண்ட காலம் ஆண்டவர் (63 வருடங்களும் 7 மாதங்களும் ) என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.
.அரசியல் ரீதியாக நடுநிலைத் தன்மை கொண்டவர்.

1

தனது 90 ஆவது பிறந்த நாளை ஒட்டிய படம் ஒன்றுக்காக மகாராணி அண்மையில் புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர் முன்.

2

தனது பிரத்தியேக வின்சர் மாளிகையின் தோட்டத்தில் தனது 4 செல்ல நாய்க்குட்டிகளுடன்.

3

மகள் ஆனுடன் அண்மையில் எடுத்த படம்

4

21 ம் திகதி ஏப்ரல் மாதம் 1926 ம் ஆண்டு பிறந்த எலிசபெத்தை அவரது தாய் எலிசபெத் மற்றும் தந்தை 6 ஆம் ஜோர்ஜ் மன்னர் ஆகியோர் அரவணைப்பில்

5

சிறுவயதில்

6

9 ஆவது வயதில்

7

இடமிருந்து வலம் : இளவரசி எலிசபெத், அவரது பெற்றோர் மற்றும் இளவரசி மார்கிரட் ஆகியோருடன் பக்கிங்காம் மாளிகையில் இருந்து 1939 ஆம் ஆண்டு மக்களுக்கு கை அசைத்தபோது.

8

வானொலி நிலையம் ஒன்றில் தனது 14 ஆவது வயதில் சகோதரியுடன்

9

1942 இல் இளவரசிகள் எலிசபெத்தும் மார்கரெட்டும்

10


1947 ஆம் ஆண்டு தந்து 21 ஆவது பிறந்த நாள் அன்று தென் ஆபிரிக்காவில்

11

1947 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ரோயல் குடும்ப படம். அப்போது எலிசபெத்துக்கும் (இடது புறம்) பிரிட்டிஷ் கடற்படையில் லெப் ரினெண்ட் ஆக பனி ஆற்றிய கிரீஸ் இளவரசர் பிலிப்புக்கும் ( இடமிருந்து 2 ஆவது ) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. எலிசபெத்தின் பெற்றோரும் சகோதரியும் கூட காணப்படுகின்றனர்.

12

20 நவம்பர் 1947 அன்று திருமணத்தின் பின்னர் எலிசபெத்தும் குடும்பத்தினரும் பக்கிங்காம் அரண்மனையில் இருந்து மக்களுக்கு கை அசைக்கின்றனர்.

13

ஜூன் 1952 இல் சுவாசப் புற்று நோயால் தந்தை இறந்தபோது முடிக்கு வரும் எலிசபெத்.

a

ஜூன் 1953 இல் நடைபெற்ற முடிசூட்டு விழாவின்போது

14

தனது மகன் இளவரசர் அன்ருவை தூக்கிவைத்திருக்கிறார். அருகில் மகள் ஆன்.

15

1966 இல் பாராளுமன்றம் ஆரம்பமானபோது

16

50 ஆவது பிறந்த நாளின் போது

17

மகன் சார்ல்ஸ் டயானாவை திருமணம் செய்தபோது

18

1997இல் இளவரசி டயானா இறந்தபோது அஞ்சலி க்காக வந்து குவிந்த பூங்கொத்துக்களை தனது கணவனுடன் பார்வையிடும் மகாராணி

b

2005 இல் இளவரசர் சார்ல்ஸ் கமீலாவை திருமணம் செய்தபோது

20

மே 2011 இல் அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் உள்ள ஐரிஸ் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகையில் உள்ள விருந்தினர் புத்தகத்தில் ம்காரணி இட்ட கையெழுத்து.

21

2012 லண்டன் ஒலிம்பிக்கில்

22

27 மே 2015 இல் பிரித்தானியாவின் புதிய பாராளுமன்ற ஆரம்பத்தின்போது

23

மகாராணிக்கு பின்னர் முடிசூட இருக்கும் மகன், பேரபிள்ளை மற்றும் பூட்டப்பிள்ளை ஆகியோருடன் மிக அண்மையில் எடுத்த படம்