செய்திகள்

எல்லைப் பாதுகாப்பு வீரர்களை சந்தித்த ஐஸ்வர்யா ராய்

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் ‘ஜாஸ்பா’ படத்தின் மூலம் திரையுலகிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்போது அமிர்தசரஸில் படப்பிடிப்பில் உள்ள இவர், எல்லைப் பாதுகாப்பு வீரர்களை சந்தித்து நீண்ட நேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராய் அமிர்தசரஸில் படப்பிடிப்பில் உள்ளதாக தகவல் தெரிந்தவுடன் அவரை பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை பாதுகாப்பு வீரர்கள் தெரிவித்தனர். அன்று படப்பிடிப்பு முடிந்தவுடன் ஐஸ்வர்யா அவர்களை சந்தித்து பேசினார்.

மேலும், பாதுகாப்பு படை வீரர்கள் ஐஸ்வர்யாவிற்கு பரிசும் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த ராணுவ தொப்பியை அணிந்து கொண்டு அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார் ஐஸ்வர்யா.

c_0 1_6 2_3

N5