செய்திகள்

எல்லை நிர்ணய அறிக்கை சிக்கலின் பின்னணியில் அரசாங்கம் : ஒன்றிணைந்த எதிரணி குற்றச்சாட்டு

உள்ளுராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயங்கள் தொடர்பான அறிக்கையில் எல்லை நிர்ணய குழுவின் சகல உறுப்பினர்களும் கையொப்பமிடாமையின் பின்னணியில் அரசாங்கத்தின் திட்டமிட்ட சூழ்ச்சியே இருப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இதன்மூலம் உள்ளுராட்சி தேர்தலை மேலும் சில காலங்களுக்கு ஒத்தி வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் இணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவே இதனை தெரிவித்துள்ளார். -(3)