எல்லை நிர்ணய அறிக்கை 28ஆம் திகதி கிடைக்கும் : மார்ச்சில் உள்ளுராட்சி தேர்தல்?
உள்ளுராட்சி எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 28ஆம் திகதி தனக்கு கிடைக்கவுள்ளதாகவும் அதனை தொடர்ந்து உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படுமெனவும் பெரும்பாளும் மார்ச் மாதத்திற்குள் அந்த தேர்தல் நடைபெறலாம் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைகள் தொடர்பான எல்லை நிர்ணய டிசம்பர் 31ஆம் திகதி வரை அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி அந்தக் குழுவினர் தமது அறிக்கையை எதிர்வரும் 28ஆம் திகதி கையளிப்பதாக தெரிவித்துள்ளனர். அது என்னிடம் கையளிக்கப்பட்டால் அடுத்த கனமே நான் அது தொடர்பாக வர்த்தமானியை வெளியிடுவேன். அதற்கு அடுத்ததாக தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். -(3)




