செய்திகள்

எல் என்ற சொல்லின் யுக மருவுகள்

மருத்துவர் சி. யமுனானந்தா

தமிழ்மொழியின் வரலாற்றை யுகங்களிற்கு அப்பால் எல் என்ற சொல் அழைத்துச் செல்கின்றது. பண்டைய இலங்கையை ஏழ்நாடு என அழைத்தனர். அங்கு வாழ்ந்த மக்களை எழுவர் என்றனர். அவர்களது மொழியினை எழு என்றனர். எழ்நாட்டு மலையினை ஏழ்மலை எழுமலை என்றழைத்தனர். அதுவே இன்றைய கதிர்காமத்தில் உள்ள எழுமலையாகும். அவ்வாறே எழுவர் வாழ்ந்த தீவாக எழுவதீவு உள்ளது. இவை எழு என்பதன் தொன்மைக்கும் அண்மைக்கும் இடையிலான ஒரு எடுத்துக்காட்டாகும்.

வேல் என்ற சொல் ஏழ் எல் என மருவியதாக கருதின் எல் என்ற சொல்லின் கருத்து இறைவனைக் குறிப்பதாக உள்ளது. எல்லம் என்பது இறைவனின் வீட்டினைக் குறிக்கின்றது. எல்லம் என்ற சொல்லே ஈழம் ஆக மருவியது. எல் என்பதற்கு ஒளி என்ற கருத்தும் தமிழில் உண்டு. எல் அக்கம் என்பது ஒளியுள்ள என்று பொருள்படும். எல்லக்கம் என்பது இலக்கம் ஆக மருவியது. இலக்கம் என்பதில் இருந்தே லங்கா என்ற சொல் வந்தது. இதுவே லங்காபுரி, இலங்கை என மருவியது. இதில் இருந்து உருவாகியதே சிறீலங்கா என்ற பெயராகும். எனவே தமிழ் ஈழம் என்ற சொல்லைத் தடை செய்ய முடியாது. தமிழீழம் என்பதன் கருத்து தமிழின் தெய்வ இல்லம் என்பதாகும்.

Tamilஏழ்ப்பாணம் என்ற ஊரின் பெயரே யாழ்ப்பாணமாக மருவியது. சிங்கபாகு மன்னனின் மகனான விஜயனின் வழித்தோன்றல்களை இலங்கையில் சிங்க எல்லர் என அழைக்கப்பட்டனர். இதில் இருந்து உருவானசொல்லே சிங்க எல்லர் சிங்களவர். எழுவர் மருவி உருவாகியதே தமிழர் ஆவர். சிங்க எல்லர் இல் இருந்து சிங்களவர் உருவானது எனவே மொழியியல் ரீதியில் அணுகினால் ஈழம், தமிழ், இலங்கை, சிறிலங்கா, லங்காபுரி, யாழ்ப்பாணம், சிங்களவர், சிங்களம் ஆகிய சொற்கள் யாவும் எல் என்ற சொல்லின் மருவிய யுக வடிவங்களாக அமைவதனைக் காணலாம். அடுத்து எல்லை ஆண்டவன் எல்லாளன் ஆயிற்று.

கடல் கோளினால் குமரிக்கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் கூட்டமான மேற்காசிய மக்களின் வாழ்வியலிலும், எல் என்ற சொல்லின் மருவிய வடிவங்கள் உள்ளன. எபிரேய மொழியில் எல் இறைவனையே குறிக்கின்றது. இசை அறா எல் இஸ்ரேல் ஆக மருவியது. எல் ஐயா Eliya ஆக மருவியது. Elaal. இறைவனின் ஆன் al – aal அல்லா Allah என மருவியது. 

வீடு Veedu > Ved .>  Bet  என மருவி  betel என்பது இறைவனின்  வீடாக மாறியது. யேசுநாதரும் சிலுவையில் அறையப்படும்போது எல்! ஓய்! எல்! ஓய்! எனவே இறைவனை மன்றாடினார்.