செய்திகள்

எல்.ரீ.ரீ.ஈ மீண்டும் தலைதூக்காது : யுத்தம் ஏற்பட வேண்டுமென்ற எண்ணம் மகிந்த தரிப்பிடமே உள்ளது என்கிறது ஜே.வி.பி

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் நாட்டில் தலைதூக்குவதற்கான சாத்தியக்கூறுகள் கிடையாது என மக்கள் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் யுத்த அழிவை எதிர்க்கொண்ட வடக்கு கிழக்கு மக்கள் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை விரும்பமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் மீண்டுமொரு யுத்தம் ஏற்பட வேண்டுமென்ற குழுவினரிடையே இருப்பதாகவும் தமிழ் மக்களிடம் அவ்வாறான எண்ணம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)